| ADDED : ஜூலை 08, 2024 01:21 AM
வால்பாறை;தடையை மீறும் சுற்றுலாபயணியரால், உயிர்பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், இங்குள்ள ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, சிறுகுன்றா கூழங்கல் ஆறு, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, சோலைாயறு பிர்லா நீர்வீழ்ச்சி, கான்கீரீவ் பால்ஸ் உள்ளிட்ட, 14 இடங்களில் சுற்றலாபயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள.இந்நிலையில், வால்பாறையை சுற்றிபார்க்க வந்துள்ள சுற்றுலாபயணியர் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். இதனால் வால்பாறையில் மீண்டும் உயிர்பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலாபயணியர் செல்லாதவாறு, போலீசாரும், வனத்துறையினரும் கண்காணிக்க வேண்டும் என்பது, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.