உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

சூலுார்;சூலுார் தோட்டக்கலைத்துறை மற்றும் சென்னியாண்டவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், தென்னையில் ஒருங்கிணைந்த சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடக்கிறது.வரும், 6ம் தேதி கரவழி மாதப்பூரில், விவசாயி சிவசாமி தோட்டத்தில் காலை 10:30 மணிக்கு, துவங்கும் முகாமில், பொள்ளாச்சி ஆழியாறு தென்னை ஆராய்ச்சி மை விஞ்ஞானி சீதாலட்சுமி பங்கேற்று பயிற்சி அளிக்க உள்ளார். தென்னந்தோப்புகளில் நேரடியாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் அனைவரும் பயிற்சி முகாமில் தவறாது பங்கேற்று பயன்பெற சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்