உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொண்டு நிறுவன செயல்பாடுகள் குறித்து வேளாண் மாணவியர் பயிற்சி

தொண்டு நிறுவன செயல்பாடுகள் குறித்து வேளாண் மாணவியர் பயிற்சி

பொள்ளாச்சி;வேளாண் மாணவியர், தன்னார்வ தொண்டு நிறுவன செயல்பாடுகள் குறித்து பயிற்சி மேற்கொண்டனர்.பொள்ளாச்சி மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்வி நிறுவனம் மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை இறுதி ஆண்டு மாணவியர், 30 பேர், கிராம தங்கல் திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி சேவாலயம் அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடு குறித்து பயிற்சி மேற்கொண்டனர்.ஒரு வாரம் நடந்த பயிற்சி முகாமில், மாணவியருக்கு தினமும் யோகா பயிற்சி நடத்தப்பட்டது. மனோன்மணியம்மாள் நினைவு பாரதி படிப்பகத்தில் உள்ள நுால்களை துறை வாரியாக பிரித்து வரிசை எண் போட்டு சரி செய்து வைத்தனர்.தொடர்ந்து, பறவைகளுக்கு கோடை காலத்தில் தண்ணீர் வைக்க விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். குஞ்சிபாளையம் ராமஜெயம் அறக்கட்டளையின் உணவு தயார் செய்து பொட்டலமாக மடித்து, 40 கி.மீ., சுற்றளவில், 600 பேருக்கு உணவு வழங்கும் அன்னதான சேவையை பார்வையிட்டனர்.பொள்ளாச்சி சட்ட ஆலோசனைக்குழுவின் சட்ட விழிப்புணர்வு முகாமில் பங்கேற்று நீதிபதிகள் கூறிய கருத்துக்களை குறிப்பெடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, ஆரோக்கிய பானம், பல்பொடி தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்றனர்.பழைய சர்க்கார்பதி பழங்குடியின மக்கள் கிராமத்தில் கள ஆய்வு செய்து, துாய்மை பணிகள் மேற்கொண்டு நெகிழி ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சேவாலயம் அறக்கட்டளையின் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி