உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கான்கிரீட் வீடு கட்டித்தர பழங்குடியினர் கோரிக்கை

கான்கிரீட் வீடு கட்டித்தர பழங்குடியினர் கோரிக்கை

வால்பாறை : பழங்குடியினருக்கு கான்கீரிட் வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை அடுத்துள்ளது கல்லார் குடி செட்டில்மென்ட். இங்கு, 27 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், இங்கு நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். மூப்பன் சக்திவேல் வரவேற்றார்.கூட்டத்தில், கல்லார் குடியில் அரசின் சார்பில் கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும். தாய்முடி என்.சி., பிரிவில் இருந்து கல்லார் குடி வரையிலான, 3 கி.மீ. தூரம் உள்ள ரோட்டை நகராட்சி சார்பில் சீரமைக்க வேண்டும்.பூர்வீக இடமான கல்லார் குடியில் விவசாயம் செய்ய இடம் வழங்க வேண்டும். குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், குடிநீர் தொட்டி கட்டி கொடுக்க வேண்டும். நகராட்சி சார்பில், சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை