உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்மாநில கால்பந்து போட்டி ரத்தினம் கல்லுாரிக்கு டிராபி

தென்மாநில கால்பந்து போட்டி ரத்தினம் கல்லுாரிக்கு டிராபி

கோவை: தென் மாநில அளவிலான கால் பந்து போட்டியில், ரத்தினம் கல்லுாரி அணி முதல் பரிசை தட்டியது.நாராயண குரு கல்லுாரியில், 19வது தென் மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி, நான்கு நாட்கள் நடந்தது. ஆண்களுக்கான இப்போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த, 16 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.பல்வேறு சுற்றுகளை அடுத்து, நடந்த முதல் அரையிறுதியில், ரத்தினம் கல்லுாரி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் திருச்சூர், எம்.இ.எஸ்., அஸ்மபி அணியை வீழ்த்தியது. இரண்டாம் அரையிறுதியில், கூடலுார் அரசு கலைக் கல்லுாரி அணி, 2-1 என்ற கோல் கணக்கில் பாலக்காடு மைனாரிட்டி கல்லுாரி அணியை வென்றது.இறுதிப்போட்டியில், ரத்தினம் கல்லுாரி அணி, 2-0 என்ற கோல்களில், கூடலுார் அரசு கலைக் கல்லுாரி அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, முன்னாள் இந்திய அணி கால்பந்து வீரர் ராமன் விஜயன், நாராயண குரு கல்லுாரி சேர்மன் சாத்து குட்டி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ