உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரு குழந்தைகள் பலி மூன்று பேர் மீது வழக்கு

இரு குழந்தைகள் பலி மூன்று பேர் மீது வழக்கு

கோவை:கோவை சரவணம்பட்டி அடுத்த சின்னவேடம்பட்டியில், இந்திய ராணுவத்திற்கு சொந்தமான, 'ராமன் விஹார்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள பூங்காவில், ஆந்திர மாநிலம், நெல்லுாரை சேர்ந்த பிரசாந்த் ரெட்டி மகன் ஜெயான் ரெட்டி, 6, நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த பாலசுந்தர் மகள் வியோமா பிரியா, 8, ஆகிய இருவர், கடந்த 23ம் தேதி சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். பாலசுந்தர் புகாரில் சரவணம்பட்டி போலீசார், வழக்கு பதிந்து விசாரித்தனர். அஜாக்கிரதையாக விபத்தை ஏற்படுத்தி, மரணம் விளைவித்தது தெரிந்து, குடியிருப்பின் எலக்ட்ரீஷியன் திண்டுக்கலை சேர்ந்த சிவா, 29, ஒப்பந்ததாரர்கள் சரவணம்பட்டியை சேர்ந்த முருகன், 45, வடவள்ளியை சேர்ந்த சீனிவாசன் மீது 304 'ஏ' பிரிவின் கீழ் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை