கற்பகம் பல்கலை மாணவர்கள் இருவர் இந்திய அணிக்கு தேர்வு
கோவை;ஆசிய ஹேண்ட்பால் விளையாட்டு போட்டியில், கற்பகம் பல்கலை மாணவர்கள் இருவர் தேர்வாகி உள்ளனர்.கோவை, கற்பகம் பல்கலையில் பயிலும் ராமன், மணிகண்டன் ஆகிய இருவரும் பல்கலையில் ஹேண்ட்பால் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஜோர்டானில் இன்று துவங்கும் ஆசிய அளவிலான யூத் சாம்பியன்ஷிப் ஹேண்ட்பால் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும், 16 பேர் கொண்ட இந்திய அணியில் ராமன், மணிகண்டன் ஆகிய இருவரும் தேர்வாகி உள்ளனர். இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இருவரையும், கற்பகம் பல்கலை தாளாளர் வசந்தகுமார், முதன்மை கல்வி இயக்குனர் முருகையா உள்ளிட்டோர் வாழ்த்தினர்.