உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இறைச்சிக்கடைகளில் சுகாதாரமில்லை: திறந்த வெளியில் கழிவு குவிப்பு

இறைச்சிக்கடைகளில் சுகாதாரமில்லை: திறந்த வெளியில் கழிவு குவிப்பு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்தவெளியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை கண்டறிந்து தடுக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், 15 வார்டுகளில், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஓட்டல், மளிகை, டிபார்ட்மென்ட் ஸ்டோர், பேக்கரி என, அதிகப்படியான வணிகக் கடைகளும் செயல்படுகின்றன.இது தவிர, இறைச்சி மற்றும் மீன் கடைளும் செயல்படுகின்றன. ஆனால், பல இறைச்சிக் கடைகளில் சுகாதார விதிமுறைகள், பின்பற்றப்படுவதில்லை. அங்கு, சேகரமாகும் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுகிறது.குறிப்பாக, ரோட்டோரம் மற்றும் நீர்வழித்தடங்களில், மூட்டையாகக் கட்டி, மறைமுகமாக கொட்டப்படுவதால், சுகாதாரம் பாதிக்கிறது. அவைகளை மோப்பம் பிடிக்கும் தெருநாய்கள், கழிவுகளை ரோட்டின் நடுவே எடுத்துச் சென்று, அங்கேயே விட்டுச் செல்கின்றன.அந்தந்த கடைகளிலேயே, இறைச்சிக் கழிவுகளை சேகரித்து வைக்கவும், பணியாளர்கள் வாயிலாக அவைகளை சேகரித்து அப்புறப்படுத்தவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சில இடங்களில், குப்பைத் தொட்டி அமைக்கப்பட்டும், திறந்தவெளியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால், குடியிருப்பு பகுதி மக்கள் பாதிப்படைகின்றனர்.தன்னார்வலர்கள் கூறியதாவது:இறைச்சிக் கடைகள் துர்நாற்றம், புகை, துாசி படியாத இடமாக இருக்க வேண்டும். இறைச்சியை, கறுப்புக் கண்ணாடி பெட்டிக்குள் பூட்டி வைக்க வேண்டும். பெட்டியில் ஒரு பகுதி மட்டும் திறக்கும் வகையில் இருக்க வேண்டும்.தரையில் இருந்து, 3 அடி உயரத்துக்கு மேல், இறைச்சியை தொங்கவிட வேண்டும். எளிதில் சுத்தப்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும். கடையின் ரேக், டேபிள், அலமாரி போன்றவற்றின் மேல்பகுதி அலுமினியம், மார்பிள், கிரானைட் கற்கள் என, ஏதேனும் ஒன்று பயன்படுத்த வேண்டும் என, பல்வேறு விதிகள் உள்ளன.ஆனால், இப்பகுதியில் செயல்படும் கடைகளிலும் இதுபோன்ற சுகாதார விதிகள் பின்பற்றப்படுவது கிடையாது. மாறாக, பேரூராட்சி துாய்மைப் பணியாளர்களிடம் சிலர் மட்டுமே எஞ்சிய கழிவுகளை ஒப்படைக்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை