மேலும் செய்திகள்
திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
2 hour(s) ago
இளநீர் விலையில் மாற்றமில்லை
2 hour(s) ago
சாலை விபத்தில் பள்ளி மாணவன் பலி
2 hour(s) ago
யூனியன் வங்கி ஊழியர்கள் சங்க வெள்ளி விழா மாநாடு
2 hour(s) ago
அன்னூர்;அன்னூர் வட்டாரத்தில் குப்பை சேகரிக்க வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள், ஏழே மாதங்களில் பழுதாகி முடங்கின. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், ஊராட்சிகளில், 150 வீடுகளுக்கு, ஒரு தூய்மை பணியாளர் நியமிக்கப்பட்டு, பேட்டரி வாகனத்தில் வீடு வீடாக சென்று, குப்பை சேகரித்து வந்தனர். இதற்காக ஏழு மாதங்களுக்கு முன, ஏழு ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்க டிராக்டர்களும், 14 ஊராட்சிகளுக்கு தலா 2.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, பேட்டரி ஆட்டோக்களும் வழங்கப்பட்டன. தற்போது அவை பழுதாகி விட்டன.இது குறித்து, வார்டு உறுப்பினர்கள் சிலர் கூறுகையில், 'வழங்கப்பட்ட ஏழு மாதங்களில், பெரும்பாலான பேட்டரி வாகனங்கள் பழுதாகி விட்டன. பழுது நீக்குவதற்காக அரசு நியமித்துள்ள நிறுவனத்தை, ஒரு மாதமாக தொடர்பு கொண்டும் நடவடிக்கை இல்லை.ஏற்கனவே, தேவையை விட குறைவான எண்ணிக்கையில் மட்டுமே, பேட்டரி வாகனங்கள் உள்ளன. அதிலும் பல வாகனங்கள் பழுதானதால், வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்க முடியவில்லை. சாதாரண தள்ளுவண்டியில், சுட்டெரிக்கும் வெயிலில் குப்பை சேகரிக்க பணியாளர்கள் தயங்குகின்றனர். பேட்டரி வாகனங்களை பழுது நீக்கித்தர வேண்டும்' என்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago