மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
4 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
4 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
4 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
4 hour(s) ago
வால்பாறை : வால்பாறைக்குஅய்யர்பாடி துணை மின் நிலையத்தின் வாயிலாக, மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மின் பராமரிப்பு பணிக்காக மாதம் தோறும் ஒரு நாள் மின் தடை செய்யப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு, 1:00 மணி வரை மின் வெட்டு ஏற்பட்டது. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வால்பாறையில், 16 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டதால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். பல்வேறு பகுதியில் இருந்தும் வந்த சுற்றுலா பயணியரும் பாதித்தனர்.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறையில் சமீப காலமாக முன் அறிவிப்பும் இன்றி, பல மணி நேரம் மின் வெட்டு செய்யப்படுகிறது.வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடும் வால்பாறையில், நள்ளிரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்படுவதால், எஸ்டேட் தொழிலாளர்கள் அச்சத்துடன் இருக்க வேண்டியுள்ளது.மின் வெட்டு ஏற்படும் போது, பி.எஸ்.என்.எல்., நெட்ஒர்க் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் அவசரத்தேவைக்கு ஆம்புலன்சை கூட அழைக்க முடியாமல் எஸ்டேட் தொழிலாளர்கள் பாதிக்கின்றனர்.இவ்வாறு, கூறினர்.மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறையில் உயர்மின் அழுத்த மின் கம்பி மாற்றம் செய்யப்படுவதால், மின் தடை ஏற்பட்டது. தவிர்க்க முடியாத காரணத்தால் பல மணி நேரம் மின் வெட்டு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஓரிரு நாளில் பிரச்னை முழுமையாக சரி செய்யப்படும்,' என்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago