உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேராசிரியர்களுக்கான இறகுப்பந்து போட்டி; நேரு கல்லுாரியில் துவக்கம்

பேராசிரியர்களுக்கான இறகுப்பந்து போட்டி; நேரு கல்லுாரியில் துவக்கம்

கோவை;நேரு கல்வி குழுமத்தில் உள்ள கல்லுாரிகளில் பணியாற்றும், பேராசிரியர்களுக்கான இறகுப்பந்து போட்டி, திருமலையம்பாளையம் நேரு கல்லுாரி வளாகத்தில், நேற்று துவங்கியது.நேரு கல்வி குழுமம் சார்பில், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள, நேரு கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கான போட்டி, நேற்று முதல் நாளை வரை, மூன்று நாட்கள் நடக்கிறது.போட்டியை, நேரு மேலாண்மை கல்லுாரி முதல்வர் மோசஸ் டேனியல் துவக்கி வைத்தார். இதில் 10 கல்லுாரிகளை சேர்ந்த சுமார், 100 பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

நேற்று நடந்த போட்டி முடிவுகள்

ஒற்றையர் பிரிவில், பிஜூ (பி.கே.தாஸ் மருத்துவ கல்லுாரி), சதீஷ் குமாரையும் (நேரு கலை அறிவியல் கல்லுாரி), அருண் குமார் (என்.சி. பி.ஐ.ஆர்.,) மணிகண்டனையும் (நேரு கலை அறிவியல் கல்லுாரி) வீழ்த்தினர்.இரட்டையர் பிரிவில், குமரேசன் - கார்த்திகேயன் (நேரு இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி) ஜோடி, சிவக்குமார் - மணிகண்டன் (நேரு கலை அறிவியல் கல்லுாரி) ஜோடியையும், மதன் - வடிவேல் (நேரு தொழில்நுட்ப கல்லுாரி) ஜோடி, நவீன் - பாலசுப்ரமணி (நேரு பிசியோதெரபி கல்லுாரி) ஜோடியையும் வீழ்த்தினர்.போட்டிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரியின் உடற்கல்வித்துறை இயக்குனர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி