உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீர் வழித்தடங்கள் துார் வார கோரிக்கை

நீர் வழித்தடங்கள் துார் வார கோரிக்கை

சூலுார்:''நீர் நிலைகள் மற்றும் நீர் வழிப்பாதைகளை துார் வாரும் நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் துவக்க வேண்டும்,'' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. சூலுார் வட்டார கிராமங்களில் உள்ள குளங்கள், குட்டைகள் பருவ மழையை நம்பியே உள்ளன. அடுத்து துவங்க உள்ள பருவ மழைக்கு முன், நீர் நிலைகளை துார் வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து விவசாயி கணேசன் கூறியதாவது:சூலூர் வட்டாரத்தில் அனைத்து கிராமங்களிலும் குட்டைகள் உள்ளன. ஆனால், நீர் வழிப்பாதைகள் அனைத்தும் புதர் மண்டி கிடக்கிறது. கழிவுகள் கொட்டும் இடமாக மாறி உள்ளது. தற்போது வெயில் வாட்டி எடுக்கிறது.மரங்களை வெட்டி வருவதால், வெப்பம் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தை குறைக்க மரக்கன்றுகளை அதிகம் நடவு செய்ய வேண்டும். வரும் பருவ மழைக்கு முன் ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள நீர் நிலைகள் மற்றும் நீர் வழிப்பாதைகள் துார் வாரப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் உடனடியாக எடுக்க வேண்டும். துார் வாரி வைத்தால் தான் மழை நீர் தடையின்றி நீர் நிலைகளுக்கு வந்து சேரும். மேலும், நீர் நிலைகளில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ