மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவர்கள் சமூகபணியில் ஈடுபடணும்!
24-Jan-2025
வால்பாறை; வால்பாறை நகரை துாய்மைப்படுத்தும் வகையில், மாணவர்களிடையே நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.வால்பாறை நகராட்சி துாய்மை துாய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார்.நகராட்சித்தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் ரகுராமன், துணைத்தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நகராட்சி அதிகாரிகள் பேசியதாவது:மாணவர்கள் கல்லுாரி வளாகத்திலும், பொது இடங்களிலும் குப்பையை தெருவில் வீசக்கூடாது. துாய்மை இந்தியா திட்டம் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுற்றுப்புற சூழலை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள், வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை, தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது குறித்து பொதுமக்களிடையே மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, பேசினர். 'ஸ்பாட் டெமோ'
வால்பாறை நகராட்சி சார்பில், சுப்ரமணிய சுவாமி கோவில், கூழாங்கல் ஆறு, புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி கிடந்த குப்பையை, துாய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் சேகரித்தனர்.அதன்பின், அங்கேயே குப்பைகளை தரம் பிரித்து காண்பித்து, குப்பையை உரிய தொட்டியில் தரம் பிரித்து கொட்ட வேண்டும். சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிக்காக்க நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என, கேட்டுக்கொண்டனர்.
24-Jan-2025