உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடையை மீறி சென்றார்; மழை நீரில் சிக்கியது கார்

தடையை மீறி சென்றார்; மழை நீரில் சிக்கியது கார்

போத்தனூர்:போத்தனூர் அடுத்த கோணவாய்க்கால்பாளை யத்தை சேர்ந்தவர் மாணிக்கராஜ், 22, சிங்காநல்லூரில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். நேற்று மாலை இவர் தனது 'ஸ்கார்பியோ, காரில் நஞ்சுண்டாபுரம் நொய்யலாறு பாலம் வழியே, ராமநாதபுரம் செல்ல வந்தார்.ஆற்று மழைநீரில் வாகனம் வந்தபோது, சைலன்சரில் மழை நீர் புகுந்ததால், இன்ஜின் 'ஆப்' ஆனது, தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், வாகனத்தை மீட்டனர்.இவ்வழியே தற்போது மழை நீர் தேங்கியுள்ளதால், வாகனங்கள் செல்லாமல் இருக்க போத்தனூர் போலீசார் 'பேரிகார்டு' வைத்துள்ளனர். அதனையும் மீறி சென்றதால், மாணிக்கராஜ் சிக்கலுக்குள்ளானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை