உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டுப்பதிவு உயர செய்ய வேண்டியதென்ன? வழிமுறைகளை பட்டியலிடுகின்றனர் தொழில் துறையினர்

ஓட்டுப்பதிவு உயர செய்ய வேண்டியதென்ன? வழிமுறைகளை பட்டியலிடுகின்றனர் தொழில் துறையினர்

கோவை : நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில் ஏழு லட்சம் பேர் ஓட்டுப்போடவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அனைவரும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளையே சுட்டிக்காட்டுகின்றனர். இந்த குளறுபடிகளை களைந்தால், 100 சதவீத ஓட்டுப்பதிவு கூட சாத்தியம்தான் என்கின்றனர், நம் கோவை மக்கள்.சி.டி.ஆர்.ஐ. (அகில இந்திய ஜவுளி கூட்டமைப்பு பருத்தி அபிவிருத்திக்கழகம்) தலைவர் ராஜ்குமார்: நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்கு, நல்ல ஆட்சிவர வேண்டும் என்று முதலில் மக்கள் விரும்ப வேண்டும். நாட்டின் முன்னேற்றத்துக்கு, இந்த ஓட்டு முக்கியம் என்ற சிந்தனை மனதில் வரவேண்டும்.அரசு எத்தனையோ திட்டங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. அதே போல் தேர்தல் காலத்தில் மட்டுமல்லாமல், சாதாரண நாட்களிலும் ஓட்டு செலுத்துவது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன்: வாக்காளர்களின் முதல் கடமையே ஓட்டளிப்பது தான். ஒவ்வொ ருவரும் அந்த பொறுப்பை உணர்ந்து, செயல்பட வேண்டும்.ஓட்டுப்பதிவு நாளை, வாரத்துவக்கத்திலோ இறுதியிலோ வைப்பதால், பலரும் தொடர் விடுமுறைக்கு வெளியூர் செல்கின்றனர். அதனால் வாரத்தின் நடுப்பகுதியில் செவ்வாய், புதனில் நடத்த வேண்டும்.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருப்பது, கள்ளஓட்டு போட்டதாக புகார் போன்ற வற்றால் மக்களுக்கு நம்பிக்கையில்லாத நிலை ஏற்படுகிறது. இதை போக்கும்வகையில் ஓட்டுப்பதிவு இருக்க வேண்டும்.நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஓட்டு செலுத்துவதை எளிமைப்படுத்துவதோடு, வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்.நாட்டுமக்களுக்கு ஆதாரை எப்படி எளிமைப்படுத்திக்கொடுத்தனரோ, அதே போல் எளிதில் மாற்றமுடியாத வகையில், ஓட்டு செலுத்துவதையும் நவீன தொழில் நுட்பத்தின் வாயிலாக எளிமைப்படுத்த வேண்டும்.இந்திய தொழில் கூட்டமைப்பு தென்மண்டல தலைவர் நந்தினி ரங்கசாமி:எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, மகளிருக்கான ஓட்டுச்சாவடிகளையும் அதிகரிப்பது அவசியம்.வாக்காளர் பட்டியலில், பெயர் விடுபட்டிருப்பதற்கான காரணங்களை தெரிவிப்பதோடு, அவர்களுக்கான ஓட்டுக்களை செலுத்த, சட்டரீதியாக வாய்ப்பு வழங்க வேண்டும்.கோடை வெயிலின் உச்சகட்டத்தில், ஓட்டு போடுவதில் உள்ள சிரமத்தை போக்க, உரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இரவு 7:00 மணி வரை, வாக்களிக்க வாய்ப்பு வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியலை, டிஜிட்டல் மயமாக்க வேண்டும்.ஓட்டுக்கள் செலுத்துவதை தொழில்நுட்ப ரீதியாக எளிமைப்படுத்த வேண்டும்.வாக்காளர்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தினால், நுாறு சதவீத ஓட்டுப்பதிவு சாத்தியமே.வனிதா மோகன்

'ஓட்டுப்போடாதவர்களுக்கு அரசு சலுகையை நிறுத்தணும்'

உமா மகேஸ்வரி, இல்லத்தரசி, ராமநாதபுரம்: வாக்களிப்பது நம் கடமை. நம் நாட்டின் நலனுக்கும் எதிர்கால நலனுக்கும் சேர்த்து, நல்லவரை தேர்வு செய்ய நாம் கட்டாயம் ஓட்டு போட வேண்டும். அரசிடம் நம் உரிமையை கேட்பதற்கு, நம்மிடம் உள்ள வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த வேண்டும்.ரேணுகா தேவி, இல்லத்தரசி, வடவள்ளி: ஒவ்வொருவரும் செலுத்தும் ஓட்டு, ஐந்து ஆண்டுகள் வரை ஆயுளை கொண்டுள்ளது. ஓட்டுக்கான வலிமை என்ன என்பதை, மக்கள் புரிந்து வைத்திருக்க வேண்டும். சதாரண நாட்களில் அரசும், தேர்தல் கமிஷனும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.ராஜேஷ் கணேசன், லிங்கனுார்: இன்றைய டிஜிட்டல் யுகத்தில், வாக்காளர்கள் வீடுகளில் இருந்தே வாக்களிக்கும் முறையை ஏற்படுத்தினால் ஒவ்வொருவரும் வாக்களிக்க வாய்ப்புள்ளது. வாக்களிக்காதவர்களுக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை நிறுத்த வேண்டும். ஓட்டுக்களை செலுத்தாமல் இருப்பதால், ஏற்படும் தவறான ஆட்சி மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.சீனிவாசன், தொழில்முனைவோர்: அரசு, மக்களிடம் நுாறு சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்தை சொன்னால் மட்டும் போதாது; வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகளை நீக்க வேண்டும். அதற்கு, வாக்காளர் பட்டியலோடு, ஆதாரை இணைக்க வேண்டும். இறந்தவர்கள், வெளிநாடு சென்று செட்டில் ஆனவர்களின் ஓட்டுக்களை, ஒப்புதல் பெற்று நீக்க வேண்டும்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

N Annamalai
ஏப் 24, 2024 12:42

ஓட்டு போட்டால் அன்றைய அரசு /தனியார் நகர ப் பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவச பயணம் அனுமதிக்கலாம் எல்லா தேநீர் கடைகளிலும் ஓட்டு போட்டவர்களுக்கு இலவச தேநீர் ஒன்று வழங்கலாம் ஆட்டோ பயணம் பாதி விலையில் கொடுக்கலாம் மதிய உணவும் பாதி விலையில் கொடுத்தால் ஓட்டு முழுமையாக விழ வாய்ப்பு உள்ளது

N Annamalai
ஏப் 24, 2024 12:38

ஒருவர் வருமான/வேலை செய்யும் முகவரி மாறினால் மூன்று மாதத்திற்குள் ஓட்டு அந்த தொகுதிக்குள் மாற்ற பட வேண்டும்

Bye Pass
ஏப் 24, 2024 05:17

வாக்களிக்காதவர்களுக்கு டாஸ்மாக்கில் சரக்கு விற்பனை நிறுத்தலாம்

மேலும் செய்திகள்

முக்கிய வீடியோ