உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சோக் பிட் வீட்டின் எந்த இடத்தில் அமைக்கலாம்?

சோக் பிட் வீட்டின் எந்த இடத்தில் அமைக்கலாம்?

கட்டட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் வாசகர்களின் சந்தேகங் களுக்கு பதிலளிக்கிறார். கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்க (காட்சியா) தலைவர் மற்றும் பொறியாளருமான ரமேஷ் குமார்.நாங்கள் புதிதாக கட்டும் வீட்டில் எந்தெந்த இடத்தில், எப்பொழுது வாட்டர் ப்ரூபிங் வேலையை செய்யலாம்.- தமிழ்ச்செல்வன், போத்தனூர்.புதிய வீட்டில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு பாத்ரூம்களிலும் டைல்ஸ் ஒட்டும் வேலையை ஆரம்பிப்பதற்கு முன், தரை தளத்திலும், சுவற்றில் இரண்டு அடி அளவிற்கும் வாட்டர் ப்ரூபிங் அவசியம் செய்ய வேண்டும். மொட்டை மாடியில் தளம் அல்லது டைல்ஸ் அமைக்கும் முன்பு வாட்டர் ப்ரூபிங் செய்வது நல்லது.எங்கள் வீட்டின் மேல் மாடியில், புதிய வீடு கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம். மொட்டை மாடியில் பில்லர் கம்பிகள் ஏற்கனவே நீட்டி விடப்பட்டுள்ளது. அதை புதிய பில்லர் கான்கிரீட்டுக்கு கம்பி கட்டும்போது, எந்த விதத்தில் இணைத்தால் சரியாக இருக்கும்?- விஜயகுமார், கோவில்பாளையம்பழைய பில்லர் கம்பிகள் துருப்பிடித்த நிலையில் இருந்தால், அதை நன்றாக சுத்தம் செய்து, 'ஆன்ட்டி கரோசிவ் பெயின்ட்' அடித்து, பிறகு அதனுடன் புதிய கம்பியை குறைந்தது ஒரு மீட்டர் நீளத்திற்கு வெல்டிங் செய்து இணைத்தால், வலிமையாக இருக்கும்.புதிய வீட்டின் சுவர்களுக்கு ஒயிட் சிமென்ட் அடிக்காமல், பட்டி வைக்கும் வேலையை செய்யலாமா?- ஐஸ்வர்யா, ஒண்டிப்புதூர்தற்போது மார்க்கெட்டில் விற்கப்படும் பெரும்பாலான பட்டிகள், ஒயிட் சிமென்டை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டிகளே. எனவே அந்த பட்டியை சுவற்றில் வைப்பதற்கு முன்பு, ஒயிட் வாஷ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.புதிய வீடு கட்டும்போது, 2, 500 சதுர அடி வரை கட்டட அனுமதி பெற தேவையில்லை என்று கூறுகிறார்கள். இது உண்மையா? -- நடராஜன், வீரபாண்டி பிரிவு2,500 சதுர அடிக்குள் கட்டும் கட்டடத்திற்கான கட்டட வரைபடத்தை விதிகளின்படி வடிவமைத்து, அதில் விதிகளின்படி தான், நான் இந்த கட்டடத்தை கட்டுவேன் என்று உரிமையாளர் சுய ஒப்புதல் படிவத்தை இணைத்து, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்த பின் கட்டட பணிகளை ஆரம்பிக்கலாம்.நாங்கள் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கும் ஏரியாவில், கழிவுநீர் வடிகால் வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. எனவே சோக்பிட் அமைத்து, அதில் கழிவுநீரை விடலாம் என்று இருக்கிறோம். அந்த சோக்பிட்டை வீட்டை ஒட்டி அமைக்கலாமா?- மூர்த்தி, பீளமேடுசோக்பிட்டை கட்டடத்தின் வெளிப்புறத்தில் இருந்து, குறைந்தது ஒரு மீட்டர் தள்ளியே அமைக்க வேண்டும்.இல்லையெனில் மண்ணிற்குள் இறங்கும் கழிவு நீர் கட்டடத்தின் அஸ்திவாரத்தை பாதிக்கக்கூடும். அரசு விதிகளின்படி, சோக்பிட்டை வீட்டிற்கு முன்புறம் உள்ள சாலைகளில் அமைக்கக்கூடாது. தங்களது இடத்திற்கு உள்புறம் வருமாறு அமைக்க வேண்டும்.தற்போது கட்டப்படும் புதிய வீடுகளுக்கும், பால்ஸ் சீலிங் வேலை செய்கிறார்களே, அது எதற்காக?- முரளி, சென்னனுார்அழகுக்காக மட்டுமின்றி, சீலிங்கில் அறையின் குறுக்கே செல்லும் பீம்களை மறைக்கவும், சீலிங்கிலிருந்து வரும் வெப்பத்தின் அளவை குறைக்கவும், ஏ.சி., பயன்படுத்தும் பட்சத்தில் அதன் செயல் திறனை அதிகப்படுத்துவதற்காகவும்தான், பால்ஸ் சீலிங் அமைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை