உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டின் கூரையில் இருந்து விழுந்த தொழிலாளி மரணம்

வீட்டின் கூரையில் இருந்து விழுந்த தொழிலாளி மரணம்

வடவள்ளி;ரத்தினபுரி, பாலுசாமி நகரை சேர்ந்தவர் கார்த்திக்,28; வெல்டிங் தொழிலாளி. இவரை, கடந்த வியாழக்கிழமை, உக்கடம், புல்லுக்காடு பகுதியை சேர்ந்த அப்துல் ரபீக் என்பவர், வடவள்ளி, ஸ்ரீ லட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில், தகர சீட் அமைப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். கார்த்திக், வீட்டின் கூரை மீது ஏறி வெல்டிங் வைத்து கொண்டு இருந்தார். அப்போது, 10 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்ததில், கார்த்திக்கிற்கு, தலை மற்றும் இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்த பின்பு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தார். வடவள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை