| ADDED : ஜூலை 10, 2024 11:36 PM
கோவை : உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 'ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்பநலம்; அதுவே இந்தியாவின் புதிய அடையாளம்' என்ற கருப்பொருளில், இந்தாண்டு உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ரேஸ்கோர்ஸ் மாவட்ட சுகாதார அலுவலக வளாகத்தில், நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் கிராந்தி குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துவக்கமாக, கலெக்டர் தலைமையில், பங்கேற்பாளர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட சுகாதார அலுவலர் அருணா உடனிருந்தார். இதில், செவிலியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் என 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.