உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 10 ஆண்டு சிறை தண்டனை  பெற்று ஜாமினில் வந்தவர்  மீண்டும் கைது

10 ஆண்டு சிறை தண்டனை  பெற்று ஜாமினில் வந்தவர்  மீண்டும் கைது

கோவை : கோவை, ராமநாதபுரத்தில் செயல்பட்டு வந்த, 'கோவை லேன்ட் பேங்கர்ஸ் ' என்ற நிதி நிறுவனம், 94 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கு, கோவை டான்பிட் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிவில், குற்றம்சாட்டப்பட்ட அந்நிறுவன உரிமையாளர் முத்துக்குமாருக்கு, 2022ல், 10 ஆண்டு சிறை தண்டனை, 94 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த முத்துக்குமார், ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த ஐகோர்ட், 94 லட்சம் ரூபாய் அபராத தொகையினை மூன்று மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து, ஜாமின் வழங்கியது. ஆனால், நிபந்தனைபடி அபராத தொகையினை செலுத்தவில்லை. இதனால் அவரை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், முத்துக்குமாரை கைது செய்து, கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை