உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அனுமதியின்றி கனிம வளம் அள்ளிய 100 பேருக்கு ரூ.50 கோடி அபராதம்

அனுமதியின்றி கனிம வளம் அள்ளிய 100 பேருக்கு ரூ.50 கோடி அபராதம்

கோவை : கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியதற்காக, 100 பட்டாதாரர்களுக்கு, ஐம்பது கோடி ரூபாய் அபராதம் விதித்து, கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கோவை மாவட்டம், பேரூர் தாலுகாவில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களை ஒட்டி, வருவாய்த்துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களிலிருந்து டன் கணக்கில், லாரிகளில் கிராவல் மண் கடத்தப்பட்டது தொடர்பாக, இயற்கை ஆர்வலர்கள் சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்தனர்.கோர்ட் பிறப்பித்த உத்தரவையடுத்து, கோவை தெற்கு கோட்டாட்சியரால், 100 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள், 50 கோடி ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை தெற்கு கோட்டாட்சியர் ராம்குமார் கூறுகையில், ''கனிமவள கொள்ளை தொடர்பாக, கோர்ட் பிறப்பித்த உத்தரவை செயல்முறைப்படுத்துகிறோம். அபராதம் செலுத்த மறுத்து, 28 பேர் கலெக்டரிடம் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர்களது விண்ணப்பங்களை மறு ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N DHANDAPANI
ஏப் 09, 2025 10:31

வியாபார ரீதியாக மண் அள்ளி விவசாயி போர்வையில் மறையாமல் இருக்க தவறிழைத்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க கோட்டாச்சியரை வேண்டி விவசாயம் காக்க ஆதரவும் அளிக்க தயாராக உள்ளோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை