உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மோசடி நிதி நிறுவனத்தின் 12 ஏக்கர் நிலம் பொது ஏலம்

மோசடி நிதி நிறுவனத்தின் 12 ஏக்கர் நிலம் பொது ஏலம்

கோவை : மோசடி நிதி நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட, 12 ஏக்கர் புஞ்சை நிலம், ஏப்., 2ம் தேதி திருப்பூரில் ஏலத்தில் விடப்படுகிறது.கோவையில் செயல்பட்டு வந்த, சுபசுவாதி ஆட்டோ பைனான்ஸ் மற்றும் அபிலாஷ் ஆட்டோ பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம், 2008 வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்த வழக்கு, கோவை டான்பிட் கோர்ட்டில் விசாரணை முடிந்து, தீர்ப்பளிக்கப்பட்டது.இந்த வழக்கில், நிதி நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்டு, இடைமுடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலமிட கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே மூலனுாரிலுள்ள 9.60 கோடி ரூபாய் மதிப்புள்ள, 12 ஏக்கர் புஞ்சை நிலம் ஏலத்தில் விடப்படுகிறது.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள, டி.ஆர்.ஓ., ஆபிசில் வரும் ஏப்., 2ம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை