13 வணிக கட்டடங்கள் டமார் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி
கோவை : வாலாங்குளத்துக்கு செல்லும் வாய்க்கால் அருகே, ஆக்கிரமித்து கட்டியிருந்த வணிக கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.மாநகராட்சி மத்திய மண்டலம், 82வது வார்டுக்குட்பட்ட லங்கா கார்னர் அருகே, பர்மாசெல் காலனியில், வாலாங்குளத்துக்கு வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் அருகே வணிக ரீதிக்காக கட்டடங்கள் எழுப்பப்பட்டிருந்தன.இதனால் மழை காலங்களில், வாய்க்காலை துார்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ள முடியாமல் இருந்தது.ஆக்கிரமித்து கட்டியிருந்த, 13 வணிக கட்டடங்களை காலி செய்யுமாறு, மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று, 13 வணிக கட்டடங்களையும் இடித்து அகற்றினர்.