என்.ஜி.பி., கல்லுாரியில் 14வது பட்டமளிப்பு விழா
கோவை; கோவை என்.ஜி.பி., தொழில்நுட்ப கல்லுாரியின் 14வது பட்டமளிப்பு விழா கல்லுாரி அரங்கில் நடந்தது. என்.ஜி.பி., ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் பழனிசாமி நிகழ்வுகளை துவக்கிவைத்தார்.டி.சி.எஸ்., நிறுவனத்தின் கோவை மையத்தலைவர் மாயா ஸ்ரீகுமார் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், ''தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டேதான் இருக்கும். இன்று, நீங்கள் கற்றுக்கொள்ளும் தொழில்நுட்பங்கள், நாளை மாறலாம் அல்லது இல்லாமலும் போகலாம். தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்,'' என்றார்.சிவா டெக்ஸ்யார்ன் நிறுவன நிர்வாக இயக்குனர் சுந்தரராமன், என்.ஜி.பி., கல்விக்குழுமங்களின் செயலர் தவமணி பழனிசாமி, அறங்காவலர்களின் ஒருவரான அருண் பழனிசாமி, கல்லுாரி முதல்வர் பிரபா, டீன் பழினிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.