உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாக்காளர் பட்டியல் திருத்தம் 16,960 விண்ணப்பம் வந்தாச்சு

வாக்காளர் பட்டியல் திருத்தம் 16,960 விண்ணப்பம் வந்தாச்சு

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தங்கள் மேற்கொள்ள, 16 ஆயிரத்து 960 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம், 3,117 ஓட்டுச்சாவடிகளில் நேற்று நடந்தது. புதிய வாக்காளர்களாக பட்டியலில் பெயர் சேர்க்க, 7,223 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெயர் நீக்கம் செய்ய, 2,078, முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப்பணிகள் மேற்கொள்ள, 7,659 விண்ணப்பங்கள் நேற்று பெறப்பட்டன. நேற்று ஒரே நாளில் மொத்தம், 16 ஆயிரத்து, 960 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.புதிய வாக்காளர்களாக பெயர் சேர்க்க, படிவம்-6 கொடுத்தவர்களை, 18-19, 20-24 மற்றும், 25 வயதுக்கு மேற்பட்டோர் என பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 18-19 வயது பிரிவில் 2,780 படிவம், 20-24 வயது பிரிவில் 1,316 படிவம், 25 வயதுக்கு மேற்பட்டோராக, 3,127 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை