உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேரளாவுக்கு கடத்த முயன்ற 1.8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1.8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பொள்ளாச்சி; ஆனைமலை மற்றும் கோவைப்பகுதியில் இருந்து, கேரளாவுக்கு கடத்த முயன்ற, 1,800 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை போலீசார், ஆனைமலை பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது, கிடைத்த தகவலின்படி, ஆனைமலையில் ஒரு வீட்டின் அருகே, போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டனர்.அங்கு, 50 கிலோ எடை கொண்ட, 32 மூட்டைகளில் மொத்தம், 1,600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.விசாரணையில், 'ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட திவான்சாபுதுாரை சேர்ந்த இளங்கோவன், 34, ஆனைமலை விக்னேஷ் கண்ணன்,32, ஆனைமலை அண்ணாநகர் சிக்கந்தர்,34, ஆகியோர், ராஜபாண்டிக்கு சொந்தமான மூன்று இருசக்கர வாகனங்களில், ரேஷன் அரிசி கடத்தி வந்து பதுக்கி வைத்து, வாகனங்கள் வாயிலாக கேரளாவுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.இதையடுத்து, ரேஷன் அரிசி, வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், இளங்கோவன், விக்னேஷ்கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், சிக்கந்தர், ராஜபாண்டியை தேடி வருகின்றனர்.* கோவை மரக்கடை அருகே, போலீசார் ரோந்து சென்ற போது, ரேஷன் அரிசி, கோதுமை வாங்கி மாவு அரைத்து சாக்கு மூட்டைகளில் கட்டி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.மேலும், 200 கிலோ ரேஷன் அரிசி, 150 கிலோ கோதுமை, 100 கிலோ ரேஷன் அரிசி மாவு ஆகியவற்றை, கள்ள சந்தையில் விற்பனை செய்ய முயன்றது, கோவை உக்கடத்தை சேர்ந்த யாசின்,40, அவரது சகோதரர் இம்ரான் ஆகியோர் என்பது கண்டறியப்பட்டது. யாசினை கைது செய்த போலீசார், இம்ரான், சாமாந்து ஆகியோரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை