உள்ளூர் செய்திகள்

20 சவரன் நகை திருட்டு

போத்தனுார்; சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோடு, பழனியப்பா லே-அவுட்டை சேர்ந்தவர் கெவின், 22. இவரது வீட்டில் ஆறு மாதமாக சீரமைப்பு பணி நடக்கிறது. இப்பணிக்காக, இவரது நண்பர் செந்தில்குமார், கார்பென்டர் மாதவன் என்பவரை ஏற்பாடு செய்து கொடுத்தார். இரு நாட்களுக்கு முன் கெவினை, தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவரது மனைவி, 'பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்களை காணவில்லை' என கூறியுள்ளார். கெவின், நகைகளை கணக்கிட்டபோது, 20 சவரன் தங்கம், 100 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம். சுந்தராபுரம் போலீசார் விசாரணை நடத்தி, கார்ப்பென்டர் மாதவனை கைது செய்து, நகைகளை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ