சரக்கு ரயிலில் வந்த 2.5 டன் ரேஷன் அரிசி
பொள்ளாச்சி : ஆந்திராவில் இருந்து, பொள்ளாச்சிக்கு சரக்கு ரயிலில்வந்த, 2.5 டன் ரேஷன் அரிசி, உடுமலை நுகர்பொருள் வாணிபகழக குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது.பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், சரக்கு ரயில் நின்று செல்வதற்கு தனி இடவசதி உள்ளது. இங்கு வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் வாயிலாக, மக்காச்சோளம், கோதுமை, அரிசி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டு, அதனை லாரிகள் வாயிலாக உரிய இடத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.அதில் கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், ஆந்திராவில் இருந்து, 46 இணைப்பு பெட்டிகளுடன் சரக்கு ரயில் வாயிலாக திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்ய, 2.5 டன் ரேஷன் அரிசி கொண்டு வரப்பட்டன.அவை, 100க்கும் மேற்பட்ட லாரிகளில், உடுமலையில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்படுகிறது, என, அதிகாரிகள் தெரிவித்தனர்.