மேலும் செய்திகள்
சிட்டி கிரைம் செய்திகள்: இரு பெண்கள் மீது வழக்கு
23-Oct-2025
கோவை: கல்லுாரி மாணவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரியை சேர்ந்த அன்டலோ லெரிஸ்,20, சவுரிபாளையம், அன்னை வேளாங்கன்னி நகரில் அறை எடுத்து தங்கி, ரேஸ்கோர்சிலுள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். ேஹாட்டலில் சாப்பிட்டு அறைக்கு திரும்பிய போது, மூன்று பேர் கும்பல் வழிமறித்து அவரை தாக்கி விட்டு 12 கிராம் வெள்ளி சங்கிலி மற்றும் மொபைல் போனை பறித்து தப்பினர். புகாரின் பேரில் பீளமேடு போலீசார் விசாரித்த போது, சவுரிபாளையத்தை சேர்ந்த பாலாஜி,27, விக்னேஷ்,19, சதாசிவம்,23, ஆகியோர் வழிப்பறி செய்தது தெரிய வந்தது. மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
23-Oct-2025