மேலும் செய்திகள்
ஏரியில் மிதந்த வாக்காளர் அடையாள அட்டைகள்
1 minutes ago
பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
2 minutes ago
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு
3 minutes ago
மத்திய அரசை கண்டித்து 26ல் ஆர்ப்பாட்டம்
4 minutes ago
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், ஆந்திர பக்தர்களிடம், வசூலில் ஈடுபட்ட போலி கைடுகள் மூவர் கைது செய்யப்பட்டனர். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இரு நாட்களுக்கு முன் ஆந்திர பக்தர்கள், 39 பேர் வந்தனர். அவர்களிடம், 'கைடுகள்' என அறிமுகமான மூவர், சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறி, தலா, 250 ரூபாய் வசூலித்தனர். கோவில் கவுன்டரில், 50 ரூபாய்க்கு தரிசன டிக்கெட் எடுத்து, அவர்களை அம்மன் சன்னிதிக்கு அழைத்து சென்றனர். சுவாமி சன்னிதியிலும் இதேபோல் டிக்கெட் எடுக்க, 'சிறப்பு தரிசனம் எனக்கூறி, 50 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்கிறீர்களே' என, ஆந்திர பக்தர்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்ய, கோவில் ஊழியர்கள் விசாரித்தனர். அதில், ஓட்டல் ஒன்றில் வேலை செய்யும் சிம்மக்கல் வெங்கடேஷ், 46, என்பவர் தலைமையில், அம்மையப்பன், 42, கணேசன், 47, ஆகியோர் போலி கைடுகளாக நடித்து, ஆந்திர பக்தர்களிடம், 9,750 ரூபாய் வசூலித்தது தெரிந்தது. கோவில் உதவி கண்காணிப்பாளர் சோமசுந்தரம் புகாரில், மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
1 minutes ago
2 minutes ago
3 minutes ago
4 minutes ago