மேலும் செய்திகள்
வண்ணக் கோலமிட்டு எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு
19 hour(s) ago
ஆட்டோமேட்டிவ் துறையின் புதிய நுட்பங்கள் கண்காட்சி
19 hour(s) ago
வேலையுடன் ஊக்கத்தொகை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
19 hour(s) ago
வால்பாறை: அரசு பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமான மூன்று ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு மாணவி சஞ்சனா, தீக்குளித்ததில் நவ., 19ல் மருத்துவமனையில் இறந்தார். மாணவி வாக்குமூலத்தில், 'பள்ளியில் பணி புரியும் மூன்று ஆசிரியர்கள், தன்னை சக மாணவர்கள் முன்னிலையில் தரக்குறைவாக பேசியதோடு, சரியாக படிக்காத மாணவர்களுடன் அமர வைத்தனர். பள்ளியில் ஆசிரியர்கள் கொடுத்த மன அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன்' என, கூறியிருந்தார். இதுகுறித்து மாணவி தந்தை புகாரின்படி, தமிழாசிரியர் ரமணிபாய், வகுப்பாசிரியர் சிந்தியா, ஆங்கில ஆசிரியர் சியாமளா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மூன்று ஆசிரியர்களையும் பணியிட மாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் நேற்று உத்தரவிட்டார்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago