மேலும் செய்திகள்
மூச்சுத்திணறலால் பெண் குழந்தை பலி
14-Oct-2025
காவேரிப்பாக்கம்: பலுான் வெடித்து வாய்க்குள் சென்றதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, 3 வயது குழந்தை இறந்தது. ராணிப்பேட்டை மாவட்டம், மாகாணிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வினோத், 34. இவரது மனைவி காயத்ரி, 30. தம்பதியின், 3 வயது ஆண் குழந்தை சாம், நேற்று மாலை, 3:00 மணியளவில், பலுான் ஊதி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பலுான் வெடித்து வாய்க்குள் சென்றதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், காவேரிப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று, மேல் சிகிச்சைக்காக, வாலாஜாபேட்டை அரசுமாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரிந்தது. காவேரிப் பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Oct-2025