உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 300 கி.மீ., தூரத்துக்கு...போடுறாங்க கோடு! வனத்தீ தடுக்க ஏற்பாடு!

300 கி.மீ., தூரத்துக்கு...போடுறாங்க கோடு! வனத்தீ தடுக்க ஏற்பாடு!

கோவை:கோவை வனப்பகுதியில் வறட்சியின் காரணமாக, தீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்க, வனத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.கோவை வனக்கோட்டத்தில், வறட்சி காரணமாக கோடைக்காலத்தில், அவ்வப்போது தீ விபத்துக்கள் ஏற்படும். இதனால் வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன.இதை கருத்தில் கொண்டு, வனப்பகுதியில் காட்டுத்தீ பரவாமல் இருக்க, ஆண்டுதோறும் தீத்தடுப்புக்கோடுகளை, வனத்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர்.தீ தடுப்புக்கோடு என்பது, வனப்பகுதியில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுமார், 10 மீட்டர் துார இடைவெளி விட்டு, ஒரு அடி ஆழத்தில் பள்ளம் அமைக்கப்படும். இதனால், தீ விபத்துக்கள் ஏற்பட்டாலும், அது வனப்பகுதி முழுவதும் பரவாமல் தடுக்கப்படும். வனத்தில் ஏற்படும் வறட்சியால், வனவிலங்குகளுக்கு உப்புச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்க, வனவிலங்குகள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில், உப்புக்கட்டி வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் குடிநீர் தேவையை, பூர்த்தி செய்ய அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில், நீர் நிரப்பும் பணியும், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தடுக்கப்பட்டது'

கோவை மாவட்ட வனஅலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில், வறட்சியின் காரணமாக வனப்பகுதியில் அவ்வப்போது தீ விபத்துக்கள் ஏற்படும். இந்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீ தடுப்பு கோடுகள் அமைக்க, திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன. இம்மாத இறுதிக்குள் தீ தடுப்புக்கோடுகள் அமைக்கும் பணி நிறைவடையும். மொத்தம் 300 கி.மீ., துாரத்துக்கு, தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட உள்ளன. கடந்தாண்டு, தீத்தடுப்பு கோடு ஏற்படுத்தப்பட்டதால், பெருமளவு பாதிப்பு தடுக்கப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை