உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 32 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை: தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்குனர் தகவல்

32 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை: தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்குனர் தகவல்

கோவை : தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், உயர் கல்வி பயிலும், மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான இறுதிச்சுற்று, கோவை பாரதியார் பல்கலையில் நேற்று நடந்தது.தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமான இ.டி.ஐ.ஐ., இயக்குனர் அம்பலவாணன் கூறியதாவது: இதுவரை, 32 புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்கப்பட்டுள்ளது. இதை மேலும் அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தொழில்முனைவோருக்காக ஐ.வி.பி., என்ற இன்னோவேஷன் வவுச்சர் புரோகிராம் வாயிலாக, 5 லட்சம் ரூபாய் வரை, நிதியுதவி வழங்கப்படுகிறது.தொழில்முனைவோருக்காக சிறப்பு பயிற்சி வழங்கும் திட்டம், விரைவில் துவங்கப்பட உள்ளது. இதன் வாயிலாக அனைத்து தொழில் முனைவோரும், வரி செலுத்துதல், தொழில் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, பாரதியார் பல்கலை, இ.டி.ஐ.ஐ., தமிழ்நாடு மண்டல மைய ஒருங்கிணைப்பாளர் விமலா, பல்கலை துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் லவ்லீனா லிட்டில் பிளவர், இ.டி.ஐ.ஐ., மாநில திட்ட மேலாளர் சண்முகராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், பல கல்லுாரி மாணவர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை