உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வனப்பகுதியில் விடப்பட்ட பல்வேறு வகை 37 பாம்புகள்

 வனப்பகுதியில் விடப்பட்ட பல்வேறு வகை 37 பாம்புகள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிடிபட்ட பாம்புகளை ஆழியாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் பாம்புகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பலர் அச்சப்படுகிறார்கள். இந்நிலையில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் வனத்துறையினரால் கடந்த, இரு நாட்களில் மட்டும் பல்வேறு வகையான, 37 பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாம்புகளை வனத்துறையினர், ஆழியாறு பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி