உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமி பலாத்கார முயற்சி வழக்கில் 5 ஆண்டு சிறை

சிறுமி பலாத்கார முயற்சி வழக்கில் 5 ஆண்டு சிறை

கோவை; விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 39; 2021, ஆக. 3ல், உறவினர் வீட்டுக்குச் சென்ற அவர், தனியாக இருந்த 13 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். சிறுமி கூச்சலிட்டதால் தப்பினார். சுப்பிரமணியனை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது, கோவை முதன்மை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணியனுக்கு, ஐந்தாண்டு சிறை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ