உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலுார் பிரசார கூட்டத்தில் 50 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு

சூலுார் பிரசார கூட்டத்தில் 50 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு

சோமனூர்; சூலூரில், வருகிற 13ம் தேதி நடக்கும் பிரசார கூட்டத்தில், 50 ஆயிரம் பேர் பங்கேற்க, அ.தி.மு.க., பா.ஜ., ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சூலூர் சட்டசபை தொகுதியில், வரும், 13ம்தேதி மாலை நடக்கும் பிரசார கூட்டத்தில், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான பழனிசாமி பேச உள்ளார். இதுதொடர்பாக, சோமனூரில் கருமத்தம்பட்டி நகர, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., கந்தசாமி தலைமை வகித்து பேசுகையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியின் பிரசார பயணம், ஆளும் கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. தோல்வி பயத்தில் தி.மு.க., கூட்டணி உள்ளது. தமிழக மக்கள் மாற்றத்தை கொண்டு வர தயாராகி விட்டனர். சூலூர் வரும் பொதுச் செயலாளருக்கு,50 ஆயிரம் பேர் திரண்டு வரவேற்பு அளித்து கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்து தொண்டர்களை அழைத்து வரவேண்டும், என்றார். கோவை வடக்கு பா.ஜ. பொதுச்செயலாளர் கோபால்சாமி, அ.தி.மு.க., நகர செயலாளர் பிரகாஷ், பா.ஜ., நகர தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை