உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழிசை சங்கத்தின் 54ம் ஆண்டு விழா

தமிழிசை சங்கத்தின் 54ம் ஆண்டு விழா

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி தமிழிசை சங்கத்தின், 54ம் ஆண்டு விழா வரும், 26ம் தேதி கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் நடக்கிறது.அன்று மாலை, 6:30 மணிக்கு தமிழ் அறிஞர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் உள்ளிட்டோருக்கு பாராட்டும் பட்டமும் வழங்கப்படுகிறது.தொடர்ந்து, இரவு, 7:15 மணிக்கு 'வாழ்க்கை ஒரு நம்பிக்கை' என்ற தலைப்பில், சொற்பொழிவு நடக்கிறது. 27ம் தேதி மாலை, 6:30 மணிக்கு மலுமிச்சம்பட்டி நர்த்தகேஸ்வரா நாட்டியப்பள்ளி மாணவர்களின் நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 7:15 மணிக்கு 'இன்றைய தகவல் தொழில்நுட்பத்தால், மனித உறவுகள் வளர்கிறதா, தளர்கிறதா' என்ற தலைப்பில் சிந்தனை பட்டிமன்றம் நடக்கிறது.வரும், 28ம் தேதி மாலை, 6:30 மணிக்கு சத்யசாய் கிரியேசன்ஸ் சார்பில், மாப்பிள்ளை கணேஷ் மற்றும் குழுவினர்கள் நடிக்கும் 'பட்டணத்தில் பூதம்' என்ற முழு நீள நகைச்சுவை நாடகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை