5வது டிவிஷன் கிரிக்கெட்; 120 ரன் குவித்த கனகராஜ்
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஐந்தாவது டிவிஷன் போட்டி, எஸ்.ஆர்.ஐ.ஐ., பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடந்து வருகிறது. இதில், அப்பாசாமி கிரிக்கெட் கிளப் அணியும், அக்சயா இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த அப்பாசாமி கிரிக்கெட் கிளப் அணியினர், 50 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு, 272 ரன் எடுத்தனர். வீரர்கள் கனகராஜ், 120 ரன், சாந்தாராம் அப்பாசாமி, 79 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் அஷ்விந்த் நான்கு விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய அக்சயா கல்லுாரி அணியினர், 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 213 ரன் எடுத்தனர். வீரர்கள் ஸ்ரவேல், 70 ரன், ஆன்டனி ராபின்ஸ், 49 ரன், பிரபு, 32 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் சவுந்தரராஜன் மூன்று விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.