| ADDED : நவ 18, 2025 04:29 AM
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் ஐந்தாவது டிவிஷன் போட்டி, எஸ்.ஆர்.ஐ.ஐ., பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. இதில், சன் ஸ்டார் அணியும், அப்பாசாமி கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன் ஸ்டார் அணியினர், 40.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 135 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் டைசன் பிரபு, ஐந்து விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களம் இறங்கிய அப்பாசாமி கிரிக்கெட் கிளப் அணியினர், 36 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 136 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர் சாந்தாராம் அப்பாசாமி, 37 ரன் விளாசினார். அதற்கு முந்தைய போட்டியில், சீஹாக்ஸ் கிரிக்கெட் கிளப் அணியுடன், அப்பாசாமி கிரிக்கெட் கிளப் அணி மோதியது. பேட்டிங் செய்த சீஹாக்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர், 44.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 161 ரன் எடுத்தனர். அப்பாசாமி கிரிக்கெட் கிளப் அணியினர், 35.1 ஓவரில் இரு விக்கெட் இழப்புக்கு, 164 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர் பிரபு, 104 ரன்கள் எடுத்து அணியினர் வெற்றிக்கு வழிவகுத்தார். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.