உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 7 அம்ச கோரிக்கை; அரசுக்கு நெருக்கடி; வருவாய்துறையினர் வேலை நிறுத்தம்

7 அம்ச கோரிக்கை; அரசுக்கு நெருக்கடி; வருவாய்துறையினர் வேலை நிறுத்தம்

- நிருபர் குழு -பொள்ளாச்சியில், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி, 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், ஏழு அம்ச கோரிக்ககைளை வலியுறுத்தி நேற்று முதல், 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சப் - கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்பட்டன. இந்த அலுவலகங்களில், 31 பேர் மற்றும், ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு என மொத்தம், 70க்கும் மேற்பட்டோர் இரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். வருவாய்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடவே நிரப்ப வேண்டும். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அளவுக்கு அதிகமாக முகாம்கள் நடத்துவதை குறைக்க வேண்டும். போதிய கால அவகாசம், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.கடந்த, 2023ம் ஆண்டு மார்ச் 31ல் கலைக்கப்பட்ட, 97 பேரிடர் மேலாண்மை பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். சான்றிதழ் வழங்கும் பணிகள் மற்றும் அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த அனைத்து வட்டங்களிலும் ஒரு சிறப்பு துணை தாசில்தார் பணியிடம் ஏற்படுத்த வேண்டும்.அனைத்து நிலை வருவாய்துறை அலுவலர்களுக்கும், பணிப்பளு மற்றும் பணித்திறமைக்கேற்ப மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்துக்கான உச்சவரம்பை மீண்டும், 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடுமலை உடுமலையில், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், நேற்றும், இன்றும், 48 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வருவாய்த்துறை அலுவலர் சங்க போராட்டம் காரணமாக, உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. போராட்டத்தில், மாவட்ட துணைத்தலைவர்கள் விவேகானந்தன், சுசீலா, பாலாஜி மற்றும் கோட்ட தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை