உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 819 மனுக்கள்

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 819 மனுக்கள்

ஆனைமலை : ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தில், 819 மனுக்கள் பெறப்பட்டன.ஆனைமலை அருகே, வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி நடந்தது. துணை கலெக்டர் விஷ்ணுவர்தனி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத்சிங், பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில் இருந்து பொதுமக்கள், தங்களது குறைகளை மனுவாக கொடுத்தனர்.பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், 'ஆன்லைன்' வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டு, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என, தெரிவிக்கப்பட்டது. மொத்தம், 819 மனுக்கள் பெறப்பட்டதாக பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை