உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை கோவிலில் ரூ.90.44 லட்சம் காணிக்கை

மருதமலை கோவிலில் ரூ.90.44 லட்சம் காணிக்கை

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கையாக, 90.44 லட்சம் ரூபாய் இருந்தது.முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. உண்டியல், அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. நிரந்தர உண்டியலில், 90 லட்சத்து, 44 ஆயிரத்து, 931 ரூபாய் ரொக்கமும், 142 கிராம் தங்கமும், 4 கிலோ, 350 கிராம் வெள்ளியும், 9 கிலோ, 995 கிராம் பித்தளையும் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ