உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உழவர் சந்தையில், ரூ.2.20 கோடிக்கு விற்பனை 98,512 விவசாயிகள், நுகர்வோர் வருகை

உழவர் சந்தையில், ரூ.2.20 கோடிக்கு விற்பனை 98,512 விவசாயிகள், நுகர்வோர் வருகை

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி உழவர் சந்தையில் கடந்த மாதம், 2.20 கோடி ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளன. பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே உழவர் சந்தை செயல்படுகிறது. விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக சந்தைப்படுத்தும் வகையில், உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு பொதுமக்களுக்கு தேவையான காய்றிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் வாயிலாக, விலை மலிவாக காய்கறிகளை வாங்கி பயனடைகின்றனர். இதனால் மத்தியில் உழவர்சந்தை பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பொள்ளாச்சி உழவர்சந்தையில், மொத்தம், 80 கடைகள் உள்ளன.இங்கு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான் பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், அவ்வப்போது காய்கறி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். காய்கறிகள் தரமாகவும், விலை மலிவாகவும்; விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், நுகர்வோர்கள் சந்தையில் காய்கறி வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்த மாதம், 2 கோடியே, 20 லட்சத்து, 33 ஆயிரத்து, 855 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இதுகுறித்து, உழவர் சந்தை அதிகாரிகள் கூறியதாவது: உழவர் சந்தைக்கு கடந்த மாதம் நாளொன்றுக்கு, 7 லட்சத்து, 10 ஆயிரத்து, 769 ரூபாய் மதிப்புள்ள, 15,586.45 கிலோ காய்கறிகள் வந்தன. ஒரு நாளுக்கு, 60 விவசாயிகளும், 3,117 நுகர்வோர்களும் வந்தனர்.கடந்த மாதம் மொத்தம், 483.2 மெட்ரிக் டன் காய்கறி வரத்து காணப்பட்டது. இவைகளின் மொத்த விற்பனை மதிப்பு, இரண்டு கோடியே, 20 லட்சத்து, 33 ஆயிரத்து, 855 ரூபாயாகும். மொத்தம், 1,876 விவசாயிகள் வந்ததுடன், 96 ஆயிரத்து, 636 நுகர்வோர்கள் வந்து இருந்தனர். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை