உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வந்தது அழைப்பு

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வந்தது அழைப்பு

கோவை : கோவை மாவட்டத்தில் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய, கோவை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலதண்டாயுதம் அழைப்பு விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில், மண் வேலை, மேசன், சித்தாள், கல் உடைப்பவர், தச்சர், பெயின்டர், பிட்டர், பிளம்பர் உள்ளிட்ட 54 வகையான கட்டுமான தொழில் புரியும் தொழிலாளர்களும், உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியத்தில், 62 வகையான தொழில்புரிபவர்களும் பதிவு செய்யப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.நலவாரியங்களில் பதிவு செய்ய, 18 வயது நிரம்பியவராகவும், 60 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். இ.எஸ்.ஐ., பி.எப்., திட்டத்தில் பயன் பெறாதவராகவும் இருக்க வேண்டும்.அமைப்புசாரா தொழிலாளர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, நலவாரியங்களில் புதிதாக பதிவு செய்யவும், ஏற்கனவே நலவாரிய உறுப்பினர்கள் ஆக பதிவு செய்தவர்கள், பதிவை புதுப்பிக்கவும், நலத்திட்ட உதவித் தொகைகள் பெறுவதற்கும், www.tnuwwb.tn.gov.on என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, 60 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பணியிடத்து மரணம் போன்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.கோவை மாவட்டத்தில், அதிக வீட்டுப் பணியாளர்கள், தள்ளுவண்டி உணவு விற்பனையாளர்கள், உணவு நிறுவனங்களில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆன்லைன் டெலிவரி செய்யும் கிக் தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர்.அவர்கள், ஆன்லைன் வாயிலாகவோ பதிவு செய்யலாம். அல்லது ராமநாதபுரத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில், வாரம்தோறும் வியாழக்கிழமை காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரை, பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை