உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சப்-கலெக்டர் ஆபீசில் காதல் ஜோடி தஞ்சம்

சப்-கலெக்டர் ஆபீசில் காதல் ஜோடி தஞ்சம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, காதல் திருமணம் செய்த தம்பதி, பாதுகாப்பு கேட்டு, சப் - கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி அருகே, ஆனைமலையை சேர்ந்தவர் சுமன்,21. இவர், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீலேகா,20 என்பவரை சில நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள், நேற்று பாதுகாப்பு கேட்டு, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனுவில், 'ஸ்ரீலேகாவின் உறவினர்கள், உப்பிலியர் வீதியில் உள்ளனர். அதில், தி.மு.க., கவுன்சிலர் மற்றும் அவரது கணவர், உறவினர் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தும், வீட்டுக்கு கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்பை துண்டித்தும் மிரட்டுகின்றனர். இதனால், அச்சமாக உள்ளது. எனவே, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ