உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு அத்திக்கடவு கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா

முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு அத்திக்கடவு கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா

அன்னுார்; அத்திக்கடவு திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய முன்னாள் முதல்வர் பழனி சாமிக்கு கூட்டமைப்பு சார்பில் வரும் 9ம் தேதி பாராட்டு விழா நடக்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் 1,913 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 95 சதவீத குளங்களுக்கு தண்ணீர் விடப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கு, அடிக்கல் நாட்டி, நிதி ஒதுக்கி, திட்டம் வர காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் பழனி சாமிக்கு, அத்திக்கடவு அவிநாசி கூட்டமைப்பு சார்பில், பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 9ம் தேதி அன்னுார் அருகே கஞ்சப்பள்ளி பிரிவில் பாராட்டு விழா நடைபெறுகிறது.இதுகுறித்து அத்திக்கடவு கூட்டமைப்பு நிர்வாகிகள் நடராஜன், கணேசன் ஆகியோர் கூறியதாவது : 60 ஆண்டு காலமாக நடைபயணம், காலவரையற்ற உண்ணாவிரதம், கடையடைப்பு, என பல்வேறு போராட்டங்கள் இந்தத் திட்டத்திற்காக நடத்தினோம். முன்னாள் முதல்வர் பழனிசாமி இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி திட்டம் வர முக்கிய காரணமாக இருந்தார்.எனவே, விவசாயிகள் மற்றும் அத்திக்கடவு -அவிநாசி கூட்டமைப்பு சார்பில், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், அத்திக்கடவு ஆர்வலர்கள் பங்கேற்கும் பாராட்டு விழா வருகிற 9ம் தேதி மதியம் 3:00 மணிக்கு அம்பலவாணன் நினைவு திடலில் நடைபெறுகிறது. இதில் அத்திக்கடவு திட்டத்திற்காக போராடிய தன்னார்வலர்கள், விவசாயிகள் 10 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இதுகுறித்து அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் வருகிற 26ம் தேதி மதியம் 3:00 மணிக்கு, அன்னுார் சத்தி சாலையில் உள்ள கொங்கு மன்றத்தில் நடக்கிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை