மேலும் செய்திகள்
தேர்தல் முன்விரோத கொலை 9 பேருக்கு ஆயுள் தண்டனை
08-Oct-2025
பெ.நா.பாளையம்:காரமடை அருகே உள்ள ஆயர்பாடி கிராமத்தில் வசித்தவர் சஞ்சய்குமார்,23. எதிர் வீட்டில் சஞ்சய் குமாருக்கு தங்கை முறையாகும் கீர்த்தனா,21 வசிக்கிறார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கீர்த்தனாவை, சஞ்சய் குமார் தகாத வார்த்தையால் திட்டினார். கீர்த்தனா, கோவை வடவள்ளியில் வசிக்கும் அவரது காதலன் கமலக்கண்ணனிடம் கூறினார். கமலக்கண்ணன், 21, அவரது நண்பர் நாகராஜ்,19, ஆகியோர் கடந்த ஜூலை, 7ம் தேதி நள்ளிரவில் ஆயர்பாடி வந்து தூங்கிக் கொண்டிருந்த சஞ்சய் குமாரை, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக கமலக்கண்ணன், கீர்த்தனா, நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது மூவரும் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். நேற்று காலை கமலக்கண்ணன், மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நிபந்தனை ஜாமினுக்கான கையொப்பமிட்டு விட்டு, பெரியநாயக்கன்பாளையத்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில், நண்பர் விக்னேசுடன் வந்து கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் ரோடு, மத்தம்பாளையம் அருகே கமலக்கண்ணனை, பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர், சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் கமலக்கண்ணனுக்கு இரண்டு கையில் மணிக்கட்டு, இடது கை மோதிர விரல், வலப்புற நெத்தியில் காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனையில் கமலக்கண்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.
08-Oct-2025