மேலும் செய்திகள்
ஏரியில் மிதந்த வாக்காளர் அடையாள அட்டைகள்
2 minutes ago
பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
3 minutes ago
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு
4 minutes ago
மத்திய அரசை கண்டித்து 26ல் ஆர்ப்பாட்டம்
5 minutes ago
பந்தலுார்: பந்தலுார் பகுதியில் தேயிலை நாற்றுகளை கோடை வெப்பத்தில் இருந்து காக்க, 'ஈர பாதுகாப்பு மூட்டம்' எனப்படும் விவசாய முறை தற்போது பின்பற்றப்படுகிறது. நீலகிரி மாவட்டம் பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், தென்மேற்கு பருவமழை நிறைவடைந்த நிலையில், விவசாயிகள் தேயிலை நாற்றுகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சதுப்புநில பகுதிகளில் ஈரத்தன்மை இருக்கும் நிலையில், மேட்டுப்பாங்கான நில பகுதிகளில் கோடை காலத்தில் கடும் வறட்சி நிலவும். இது போன்ற தருணங்களில், ஈரப்பதம் இல்லாமல் தேயிலை நாற்றுகள் காய்ந்து, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். இதனால், தேயிலை நாற்றுகளை வறட்சியில் இருந்து காக்கவும், மண்ணின் ஈர தன்மையை தக்க வைக்கவும், தற்போது 'மல்ச்சிங்' எனப்படும், 'ஈர பாதுகாப்பு மூட்டம்' எனப்படும் விவசாய முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, காய்ந்த புற்களை கொண்டு தேயிலை நாற்றுகளின் அடி பகுதிகளில், அடுக்கு போன்று அமைக்கப்படுகிறது. இந்த புற்கள் ஈர தன்மையை பாதுகாப்பதுடன், களை செடிகள் வளர்வதையும் கட்டுப்படுத்துகிறது. விவசாயிகள் கூறுகையில், ' கூடலுார், பந்தலுார் பகுதிகளில் தற்போது பின்பற்றபடும் இந்த பணியின் மூலம் வரும் மழை காலம் வரை, தேயிலை நாற்றுகள் காயாமல் பாதுகாக்கப்படும்,' என்றனர்.
2 minutes ago
3 minutes ago
4 minutes ago
5 minutes ago