உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓய்வு பெற்ற அலுவலருக்கு வாசல் வரை வந்து குட்பை 

ஓய்வு பெற்ற அலுவலருக்கு வாசல் வரை வந்து குட்பை 

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர், கோவை வடக்கு கோட்டாட்சியர், தெற்கு கோட்டாட்சியர், பொள்ளாச்சி சப்கலெக்டர், கலெக்டர் அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டராக பணிபுரிந்தார் சுரேஷ்.கடந்த, 39 ஆண்டுகளாக தமிழக அரசின் பல்வேறு பதவிகளில் தொடர்ந்து பணிபுரிந்து, நேற்று பணிநிறைவு பெற்றார். பிரிவு உபசார விழா, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அதில் கலெக்டர் கிராந்திகுமார், அவர் மேற்கொண்ட பணிகளை புகழ்ந்து பேசினார். நிறைவாக கலெக்டர் அலுவலக வாசல் வரை கலெக்டரும், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளாவும் வந்து வழியனுப்பி வைத்தனர். அரசு வாகனத்தில் அதிகாரிகள் இணைந்து, பீளமேடு ஹோப்காலேஜிலுள்ள அவரது வீடு வரை சென்று, மரியாதை செய்தனர். இதனால், துணை கலெக்டராக இருந்த சுரேஷ் பெருமிதமடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ