உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பண்ணையில் நிழல்வலை கூடாரம்; துணை இயக்குனர் ஆய்வு

பண்ணையில் நிழல்வலை கூடாரம்; துணை இயக்குனர் ஆய்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தேசிய தோட்டக்கலை சார்பில் அமைக்கப்பட்ட பண்ணையில், நிழல்வலை கூடாரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பொள்ளாச்சி அருகே கெடிமேட்டில், ருக்மணி என்பவருக்கு தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில், நிழல்வலை கூடாரம் அமைக்க மானியம் வழங்கப்பட்டது.மொத்தம், 7.1 லட்சம் ரூபாய் செலவில், மானியமாக, 3.55 லட்சம் ரூபாய் கடந்த, 2023 - 24ம் ஆண்டில் வழங்கப்பட்டது. மொத்தம், ஆயிரம் சதுர மீட்டரில் அமைக்கப்பட்ட நிழல்வலை கூடாரத்தில் நாற்றுப்பண்ணை அமைத்து பயன்படுத்தி வருகிறார்.இங்கு, தக்காளி, கத்தரி, மிளகு உள்ளிட்ட நாற்றுகள் தயார் செய்து, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், பண்ணை கூடாரத்தை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) மல்லிகா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சித்தார்தன், உதவி இயக்குனர் நந்தினி ஆகியோர் ஆய்வு செய்தனர்.தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கூறியதாவது:நிழல்வலை கூடாரம் அமைக்க, மாவட்டத்தில் கடந்தாண்டு 10 பேருக்கு மானியம் வழங்கப்பட்டது. இவை சரியான அளவு மிதவெப்பநிலையை அளிப்பதால், நாற்றுகள் நல்ல முறையில் வளர்கிறது. வேர்வாடல் நோய் மீட்பு திட்டத்தில், 3,365 ெஹக்டேர் பரப்பில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு, 18.31 கோடி நிதியானது, 5,374 பயனாளிகளுக்கு இடுபொருட்களாகவும், இலவச தென்னங்கன்றுகளாகவும் மற்றும் பாதிப்படைந்த தென்னை மரங்களை வெட்டி அகற்ற மானியத்தொகையாகவும் வழங்கப்பட்டது.கடந்த, மூன்றாண்டுகளில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பல்லாண்டு பயிர்கள் சாகுபடி, பழச்செடிகள் தொகுப்பு, காய்கறி சாகுபடியை ஊக்குவித்தல் என, 1.29 கோடி ரூபாய் நிதியில், 10,553 பயனாளிகள் பயன்பெற்றனர்.மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், வீட்டு தோட்டம் அமைப்பது ஊக்குவித்தலின் கீழ், மாடித்தோட்ட தளைகள், 17,000 எண்கள், பழச்செடி தொகுப்புகள், 11,210; 1.18 கோடி நிதியில், 14,397 பயனாளிகளும்; பனை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 1.5 கோடி ரூபாயில், 437 பயனாளிகளும் பயன் அடைந்துள்ளனர்.மேலும், தமிழ்நாடு நீர் பாசன வேளாண் நவீன மயமாக்குதல் திட்டத்தின் கீழ், 1.45 கோடியில், 316 பயனாளிகள் பயன்பெற்றனர். 50 சதவீத மானியத்தில் நீர் சேமிப்பு கட்டமைப்பு, பசுமைக்குடில் அமைத்தல், நிழல்வலை கூடாரம், நிலப்போர்வை அமைத்தல், ஒருங்கிணைந்த உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மேலாண்மை, தரம் பிரித்து சிப்பம் கட்டும் முறை, வெங்காய சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க, 5.41 கோடி ரூபாயில், 7,943.08 ெஹக்டேரில் நுண்ணீர் பாசனம் அமைத்து, 5,835 பயனாளிகள் பயன் பெற்றனர். பயிர் சாகுபடிக்கான இனத்தின் கீழ், கறிவேப்பிலை பயிர் தொகுப்பு முறையில் சாகுபடி செய்ய, 2.5 கோடி நிதியை அறிவித்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.முதல்வரின் மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காக்கும் திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் நான்கு வகை ஊட்டம் தரும், 30 ஆயிரம் ஊட்டச்சத்து செடிகள், 13.5 லட்சம் ரூபாய் நிதியில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை